பட்டப்பகலில் ஹெல்மெட் திருட்டு : திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பட்டப்பகலில், ஹெல்மெட் திருடும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. ச
x
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பட்டப்பகலில், ஹெல்மெட் திருடும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில், அரியப்பம்பாளையம் அருகே தனியார் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இதன் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த  வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து சென்றார். இந்த காட்சி, தனியார் இருசக்கர வாகன ஷோரூம் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இந்நிலையில் தற்போது, ஹெல்மெட் திருடும் காட்சி, சமூக வலை தளங்களில், பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்