காதலியை கரம்பிடிக்க நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தவர் கைது

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக நண்பர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
காதலியை கரம்பிடிக்க நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தவர் கைது
x
சில தினங்களுக்கு முன், சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சவுந்தர பாண்டியன் என்பவரின் வீட்டில், நடந்த கொள்ளை தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த காரின் நம்பரை கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் குரோம்பேட்டையை சேர்ந்த செல்லத்துரை என்பவர் அந்த காரை திருட்டு நடைபெற்ற அன்று வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது. அவரிடம்நடத்திய விசாரணையில், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதையும், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்ய பணம் தேவைப்பட்டதால் திருடியதாகவும் ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து செல்லத்துரை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்