தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்...

கோவை மாவட்டத்தில் வேறு சமூகத்து பெண்ணை காதலித்த தம்பியை அண்ணன் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்...
x
மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிப் பாளையம் சிரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர்கள், வினோத் மற்றும் கனகராஜ். கலாசு மண்டி தொழிலாளியான கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு அண்ணன் வினோத் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால் கனகராஜ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க முயன்ற அவரது காதலியையும் வெட்டி விட்டு வினோத் தலைமறைவானார். வினோத்தை போலீசார் தேடி வந்த நிலையில், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். வினோத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்