மதுரை : பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 3 மாணவர்கள் படுகாயம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, அரசு உதவிபெறும் பள்ளியின் நுழைவாயிலில், பால்கனி இடிந்து விழுந்த விபத்தில், 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, அரசு உதவிபெறும் பள்ளியின் நுழைவாயிலில், பால்கனி இடிந்து விழுந்த விபத்தில், 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த சக்திவேல், குமரவேல், வீரகுமார் ஆகிய 3 பேரும் ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழமையான கட்டடம் என்று பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் தான், இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், சேதமடைந்த பகுதிகளை தீயணைப்பு துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
Next Story