சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு  பேரணி
x
சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி, பாரிமுனை பேருந்து நிறுத்தம் வரை, இந்த பேரணி நடைபெற்றது.

புதுச்சேரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

புதுக்கோட்டையில், மாவட்ட காவல்துறை சார்பாக நடந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில் போதைப் பொருளின் தீமை குறித்து விளக்கப்பட்டது. 

சேலம் மாநகர காவல்துறை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். காவல் துறை அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்