தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையம் மற்றும் குடியிருப்பில் உள்ள காவலர்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்
x
திருச்சி- புதுக்கோட்டை சாலையில், மண்டையூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், ஆழ்துளை கிணறு வறண்டு போனது. இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்துக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் போலீசார், குடியிருப்புக்கு தண்ணீர் இன்றி, குடும்பத்துடன் அவதிப்பட்டு வருகின்றனர். அருகே செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் குழாய் மூலம் இணைப்பு வழங்கினால், தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என, போலீசார் கோருகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின், விராலிமலை தொகுதியில் வரும், இந்தப் பகுதியை அமைச்சர் பார்வையிட்டு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்