இரிடியம் மோசடி - 3 பேர் கும்பல் கைது

சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்ச ரூபாய் பறித்த மூன்று பேர் கைது.
இரிடியம் மோசடி - 3 பேர் கும்பல் கைது
x
சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்ச ரூபாய் பறித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் ஸ்டாலின். சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அவர் அளித்துள்ள புகாரில் சென்னையை சேர்ந்த 3 பேர் கும்பல் இரிடியம் இருப்பதாக கூறி தன்னிடமும், தனது நண்பரிடம் 50 லட்ச ரூபாய் வரை பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர்,  சரவணன்,சிவகுமார்  உள்ளிட்ட 3 பேரை  கைது செய்தனர். அவர்களிடமிருந்து  ஒரு லட்ச ரூபாய்  மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்