நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...
x
வியாசர்பாடி மார்க்கெட் பகுதியில், சந்தோஷ் என்பவர், நகை கடை நடத்தி வருகிறார். நேற்று, இவரது கடைக்கு வந்த, 2 நபர்கள், நகை வாங்குவது போல் நடித்து, 2 மோதிரங்களை விரல்களில் மாட்டி கொண்டு ஓடினர். அப்போது, ஒருவரை மடக்கி பிடித்த போது, அவர் கத்தியைக் காட்டி மிரட்டி, தப்பினார். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி, தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்