அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை
தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசிய விவகாரம் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசிய விவகாரம் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. தேனியில் இருந்து சென்னைக்கு வந்துள்ள அமமுக நிர்வாகிகள் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், கதிர்காமு, ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 50 பேர், தினகரனை சந்தித்து, தங்கதமிழ்செல்வன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எம்.ஏ. கதிர்காமு, தினகரனுக்கு எதிரான தங்கத் தமிழ்ச்செல்வன் பேச்சு அநாகரிகமானது என தெரிவித்துள்ளார்.
Next Story