பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து
பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையினால் குற்றாலம் அருவிகளில் நேற்று முதல், தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை முதல் பெரிய அருவியில், பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் கொட்டியது. இதே போல் பழைய குற்றாலம் அருவியிலும் நேற்று மாலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
Next Story