கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு

கும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.
கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு
x
கும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே இந்த வழக்கில் போலீசார் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட முன்வரவில்லை. இதனால் வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு வழக்கு நடத்தப்படும் என காவல்துறை மற்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story

மேலும் செய்திகள்