டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...
x
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை காவிரியில்  நீர் திறக்கப்படவில்லை. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணி​யில் கர்நாடாக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரியில் உடனடியாக நீர் திறந்து விட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தும் என தெரிகிறது.   அதோடு மேகதாது விவகாரத்தையும் சுட்டிக்காட்டி வாதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்