கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மேகதாது அணை பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு, மெத்தனமாக இருக்காமல், உச்ச நீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தாமதமின்றி தடை உத்தரவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும், இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவினை, கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், அதற்காக, சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு, இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் இத்தகைய முரண்பட்ட செயல்களையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story