மகள் கண் முன்னே தாய் உயிர் இழப்பு - டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் உயிர் இழந்த சோக சம்பவம் அரங்கேறியது.
மகள் கண் முன்னே தாய் உயிர் இழப்பு - டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்
x
ஆனைக்கட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து ஷோபனா என்ற பெண் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஜம்புகண்டி அருகே எதிரே இருசக்கர வாகனத்தில்  அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள் ஷோபனா இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். அதில் தூக்கி வீசப்பட்ட ஷோபனா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த ஷோபனாவின் மகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து மோதிய பாலாஜி,அசோக் ஆகியோர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு அமைந்துள்ள மதுக்கடையில் குடித்துவிட்டு இளைஞர்கள் விபத்து ஏற்படுத்துவதாக கூறி, பெண்னின் கணவர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஷோபனாவின் உடலை எடுக்கவும் அவர்கள் அனுமதி தர மறுத்தனர். இதனால் கோவை - கேரளா செல்லும் சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்