சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்க திட்டம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
சென்னை மெட்ரோ நிறுவனத்தால் 389 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை சென்ட்ரல் பகுதி மத்திய சதுக்க திட்டம் குறித்து துணை முதமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மெட்ரோ நிறுவனத்தால் 389 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை சென்ட்ரல் பகுதி மத்திய சதுக்க திட்டம் குறித்து துணை முதமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார். சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மத்திய சதுக்க திட்டத்தில் உலக தரம் வாய்ந்த நடைபாதை, பயணிகள் பயன்படுத்தும் புல்வெளி பூங்கா, அனைத்து ரயில், பேருந்து ஒருங்கிணைப்பு, சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான கட்டமைப்புகளும் அடங்கும்.
Next Story