சவூதி அரேபியாவில் உள்ள உறவினர்களை மீட்க கோரிக்கை : ஏமாற்றி வெளிநாடு அழைத்து சென்ற ஒப்பந்ததாரர் மீது புகார்

சவூதி அரேபியாவில் உள்ள உறவினர்களை மீட்க கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சவூதி அரேபியாவில் உள்ள உறவினர்களை மீட்க கோரிக்கை : ஏமாற்றி வெளிநாடு அழைத்து சென்ற ஒப்பந்ததாரர் மீது புகார்
x
சவூதி அரேபியாவில் உள்ள உறவினர்களை மீட்க கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக சம்பளம் வாங்கித் தருவதாக கூறி காரங்காடு பகுதியை சேர்ந்த மரிய மைக்கேல்ராஜ் மற்றும்  குமார் ஆகிய இருவரை ஒப்பந்ததாரர் தாமஸ் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால், முறையான ஊதியம் வழங்காமல் அவர்களின் பாஸ்போர்ட் ,விசாவை அவர் பறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி போலீசாருக்கு  உத்தரவிட்டிருந்தார். ஆனால் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்