வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் திட்டம் : குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு தடை கோரி மனு - பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி வீடு கட்டும், குடிசை மாற்று வாரிய திட்டத்துக்கு தடை கோரிய மனுவுக்கு, 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் திட்டம் : குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு தடை கோரி மனு - பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி வீடு கட்டும், குடிசை மாற்று வாரிய திட்டத்துக்கு தடை கோரிய மனுவுக்கு, 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களில் வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் வனத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவற்றின் அனுமதியில்லாமல் வீடுகள் கட்டப்படுவதாக, திட்டத்திற்கு தடை கோரி வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், மனுவுக்கு பதிலளிக்க  அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்