தடை செய்யப்பட்ட இடத்தில் ஆவின் பால் பூத் - சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்திற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட இடத்தில் ஆவின் பால் பூத் - சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
x
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்திற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த  சில தினங்களுக்கு முன்னர் மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், அந்த இடத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்தை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக சிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்