அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் : 4 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் : 4 பேரை கைது செய்தது போலீஸ்
x
சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம், ராஜாஜி நகரை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் விஜயகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு விஜயகுமார் அப்பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த ஒரு கும்பல், விஜயகுமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடியது. படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயகுமாரை வெட்டிய சரவணன், விஜயகுமார், பிரகாஷ், நவீன்ராஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்