ஆசிரியர் தகுதி தேர்வில் குழப்பம் : தொழில்நுட்ப கோளாறால் அவதிப்பட்ட தேர்வர்கள்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற கணினி முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் குழப்பம் : தொழில்நுட்ப கோளாறால் அவதிப்பட்ட தேர்வர்கள்
x
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக கணினி வழியில் இந்த தேர்வை நடத்தியது. இந்நிலையில் மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் கல்லூரியில் தேர்வு எழுத அறைகள் ஒதுக்கப்படாததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி நிர்வாகத்தினரை தேர்வு எழுத சென்றவர்கள் முற்றுகையிட்டனர். இதேப்போல் நாமக்கல், திருவண்ணாமலை, நாகை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து பரிதவித்தனர்.

"வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும்" - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இதனிடயே தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் தேர்வு எழுத இயலாத தேர்வர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் இது பொருந்தும் என்பதால் தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் குறித்து தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்