கன்னியாகுமரி : அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து மரம் நட்ட ராணுவ வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து ஜெய் ஜவான்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி இயற்கையை காப்பாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி : அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து மரம் நட்ட ராணுவ வீரர்கள்
x
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து ஜெய் ஜவான்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி இயற்கையை காப்பாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்கள் நடுவது, பேருந்து நிறுத்த நிழல் குடைகளை சுத்தம் செய்து பராமரிப்பது மற்றும் பள்ளி கல்லூரி விளையாட்டு மைதானங்களில் உள்ள புதர்களை அகற்றி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பில் இருக்கும் ராணுவ வீரர்கள், விடுமுறைக்கு சொந்த ஊர் வரும் போது சுழற்சி முறையில் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  காட்டாத்துறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ராணுவ வீரர்கள் அங்குள்ள புதர் மண்டிய விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்தனர். பின்னர் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகளை கொண்டே 80 மரக்கன்றுகளை நட்டனர். ராணுவ வீரர்களின் இந்த செயலை பள்ளி ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் அப்பகுதி பொது மக்களும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்