அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

537 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை குறைத்து அறிவித்தது.
அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு
x
அண்ணா பல்கலைக்கழகம், 537 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை குறைத்து அறிவித்தது. இந்த உட்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. அதனைத் தொடர்ந்து, இந்த 92 கல்லூகள் உட்பட, அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்கு சென்று  தாங்கள் சேர உள்ள கல்லூரி அங்கீகாரம் பெற்றது தானா என்றும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Next Story

மேலும் செய்திகள்