பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.
x
நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வியாபாரிகள் தங்களது இடங்களை தினமும் ஒரு மணி நேரம் சுத்தமாக வைத்திருக்க ஸ்வீப் புளூ மவுண்டன் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குன்னூரின் பல இடங்களுக்கும் ஆய்வு செய்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குன்னூர் பேருந்து நிலையத்தை துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்தார். அப்போது ஆட்சியரை முற்றுகையிட்ட பெண்கள், மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அந்த மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்