ஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என்று கூறினார். முப்படைகளின் கேந்திரமாக உள்ள ஆவடி, ஐ.டி. நிறுவனத்தின் மையமாக உலக அரங்கில் விளங்கும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்