பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...

கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...
x
கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஆறு பேர், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார்  சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் முதியவர் மற்றும் மூன்று வயது குழந்தை ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற நான்கு பேரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்