நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அனைவருக்கும் உள்ளது : நாசர்

நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று மாற்றுக்கருத்துகளுடன் எதிரணியில் இருப்பதாக பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் தெரிவித்துள்ளார்
நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அனைவருக்கும் உள்ளது : நாசர்
x
நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று மாற்றுக்கருத்துகளுடன்  எதிரணியில் இருப்பதாக பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் தெரிவித்துள்ளார். கரூரில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கோரிய அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அனைவருக்கும் உள்ளதாக கூறினார். இருவரும் அணிகளும் இணைந்து தான் அந்த கட்டிடத்தை முடித்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார். நடிகர் சங்க கட்டிடத்தில் இருந்து வரும் வருமானம் மூலம் நாடக கலை மற்றும் கலைஞர்களை முன்னேற்ற வேண்டும் என்றும் நாசர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்