45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்
x
மதுரையை சேர்ந்த இளந்தமிழன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மக்களவை தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் 7 முறை சரிபார்க்கப்பட்டதாக கூறப்பட்டது. கடலோர பகுதியில் 2 ஆயிரத்து 138 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்