தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு
பதிவு : ஜூன் 17, 2019, 11:53 PM
தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் நடத்தக் கூடிய அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் தேர்தலுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.விதிமுறைப்படி, காலை 6 மணி 45 நிமிடங்களுக்கு வாக்கு பெட்டிகள் வேட்பாளர்கள் முன் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும்,வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெறும் நிலையில், 4 மணி 45 நிமிடங்களுக்கு மேல் வரிசையில் இருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு, அவர்கள் மட்டும்  வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 5 மணி பத்து நிமிடத்திற்கு வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்படும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை பெறுவதற்காக நாளைக்குள் புகைப்படத்தை தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், வரும் 21ஆம் தேதி அன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அடையாள அட்டை வைத்திருக்க கூடிய வேட்பாளர்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியும் என்றும், பிரநிதிகள் வர வேண்டுமானால் வேட்பாளர்களிடம் அனுமதி பெற்று அடையாள அட்டையை பெற்று வரவேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

17136 views

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

531 views

99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...

சேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.

215 views

பிற செய்திகள்

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

1 views

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.

10 views

மாங்கனி திருவிழா கோலாகலம் : போட்டி போட்டுக்கொண்டு மாம்பழங்களை பிடித்த பொதுமக்கள்

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

6 views

சொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

பெற்ற தாயையே, தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடந்துள்ளது.

17 views

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் : கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சம்...

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காரணமாக கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

26 views

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.