குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், குற்றால அருவிகளில் குறைவான தண்ணீர் விழுகிறது.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு
x
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், குற்றால அருவிகளில் குறைவான தண்ணீர் விழுகிறது. இதனால் குற்றாலத்தில் சீசன் மந்தமாகவே உள்ளது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. பெரிய அருவியில், குறைவான தண்ணீரே கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, குளித்தனர். இதனால் குற்றாலத்தில் குளித்து மகிழ வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்