"திருவண்ணாமலை, தேனியில் விரைவில் அருங்காட்சியகம்" - மாஃபா.பாண்டிய ராஜன்

திருவண்ணாமலையில், தொல்லியல் துறை சார்பில் அமைய உள்ள அருங்காட்சியக கட்டடத்தை, அமைச்சர்கள், மாஃபா.பாண்டிய ராஜன், சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை, தேனியில் விரைவில் அருங்காட்சியகம் - மாஃபா.பாண்டிய ராஜன்
x
திருவண்ணாமலையில், தொல்லியல் துறை சார்பில் அமைய உள்ள அருங்காட்சியக கட்டடத்தை, அமைச்சர்கள், மாஃபா.பாண்டிய ராஜன், சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறுவது போல, கொற்கை, ஆதிச்சநல்லூர், அழகன் குளம் ஆகிய பகுதிகளில் விரைவில் ஆகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். 10 கோடி ரூபாய் மதிப்பில், செஞ்சி கோட்டை சீரமைக்கப்படும் என்று கூறிய அவர், பழங்கால கோட்டைகளை சீரமைத்து சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். திருவண்ணாமலை ம​ற்றும் தேனியில் விரைவில் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், உலக தரம் வாய்ந்த அருங்காட்சியமாக விரைவில் மாற்றப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்