பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்

சென்னையில் நடைபெற்று வரும் பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சியில், 60 ஆண்டு கால பாரம்பரிய அரிய வகை தமிழ் இசை கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
x
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜ அண்ணாமலை மன்றத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலேயே கற்பிக்கப்படும் தமிழ் இசை கல்லூரி செயல்படுகிறது. இங்கு நமது முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால இசை கருவிகள் சேதாரம் இல்லாமல் தற்போதும் பயன்படுத்தும் வகையில் 60 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனை பொது மக்களும், இசை ஆர்வலர்களும் பார்த்து பயன் பெறும் வகையில் கடந்த பிப்ரவரி 17 தேதி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பஞ்சமுகி என்ற தோல் கருவி, சதுரங்க வடிவில் புல்லாகுழல், மயில் நாக வீணை, மடக்கு வீணை, தந்தம், பித்தளை நாதஸ்வரம், புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞர்களான  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வீணை, டி.கே.பட்டம்மாளின் சுதி பெட்டி, திருவாரூர் ராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம், சீர்காழி சிதம்பரத்தின் தம்புரா உள்ளிட்ட 80 இசை கருவிகள் தொல் இசை களஞ்சியம் என்ற பெயரில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்