குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது

குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக உள்ள கார்த்திகேயன் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த நான்கு பேர் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டு, அவர்களை போகச் சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார்.  ஆனால் கலைந்து போகாத அவர்கள்,  தாங்கள் வழக்கறிஞர் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலையில், காவலர் வைத்திருந்த லத்தியை எடுத்த அவர்கள், காவலரை கடுமையாகத் தாக்கியதுடன்,  வாக்கி டாக்கியை பறித்து  உடைத்துள்ளனர். காவலர் அளித்த தகவலின்படி, அங்கு வந்து சேர்ந்த ரோந்து காவலர்கள் ,  4 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த  முஹம்மது அக்பர்,  முகமது நவ்ஷத் என்பதும், அவர்கள் வழக்கறிஞர்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து , 4 பேரையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாக்கப்பட்ட காவலர் கார்த்திகேயன் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்