கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் : மகளின் தற்கொலைக்கு நியாயம் கேட்கும் தந்தை
பதிவு : ஜூன் 13, 2019, 05:38 PM
மாற்றம் : ஜூன் 13, 2019, 05:40 PM
கோவையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகளின் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவைப்புதூர் பிரிவு பகுதியை சேர்ந்த கங்காதரனின் மகள் அஸ்வினி கங்கா. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த தகவலையும் காவல்துறை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. காதல் பிரச்சினையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை கூறிய நிலையில் அதுகுறித்த எந்த கடிதத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் கங்காதரன். தன் மகள் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

105 views

பிற செய்திகள்

திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் : முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

1 views

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்

மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

22 views

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

180 views

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

12 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.