குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்...

கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்...
x
அருக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ரஸ்தாதெரு, சிவஞானபுரம் தெரு, பரசுராமபுரம் தெருக்களில், கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்கப்படாததை குறித்து பலமுறை நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய மக்கள், காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்