முல்லைபெரியாறில் புதிய அணை - ஆய்வை தொடங்கியது கேரள அரசு

தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது.
x
முல்லைபெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டவும், வாகன நிறுத்த மையம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தின் உதவியுடன், இந்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பத்து நாட்கள் நடைபெற உள்ள ஆய்வில், புதிய அணை கட்டும்  போது பருவங்காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த குழு ஆய்வு நடத்துகிறது. இது தொடர்பான ஆய்வறிக்கை, கேரள நீர்ப்பாசனத் துறை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய அணை கட்ட அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வுப்பணிகளை தொடங்கியிருப்பது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்