மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு

பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை.
மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு
x
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பாலும், மதகு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் இருப்பதாலும் 50 நாட்கள் கூட நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து கூறியுள்ள மக்கள் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இந்த குளத்தை நம்பியுள்ள நிலையில் குளத்தின் மூன்றில் 2 பகுதி நிலப்பரப்பு ஆக்கிரமிப்பில் உள்ளதால், மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என்றும், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதகுகளை சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்