விஷம் குடித்து விட்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்

விஷம் குடித்துவிட்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
x
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி அனிதா. அவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், அனிதா டிக் டாக் செயலிக்கு அடிமையாகியுள்ளார்.

பழனிவேல், சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், குழந்தைகளையும் கவனிக்காமல் டிக் டாக் செயலியில் அனிதா மூழ்கி இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடியோக்களை டிக்டாக்கில் அவர் பதிவேற்றியுள்ளார்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மகள் மோனிகா கீழே விழுந்து காயம் அடைந்ததைக் கூட கவனிக்காமல் 'டிக்-டாக்' செயலியில் அனிதா மூழ்கி இருந்ததாகவும், இதுகுறித்து உறவினர்கள் மூலம் தகவல் அறிந்த பழனிவேல், மனைவியை தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. அதனால், மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 10 ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். அதனை டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக எடுத்தும் வெளியிட்டுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்