சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக சாத்தியமில்லை : சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா திட்டவட்டம்

பெங்களூரூ சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான வாய்ப்பே இல்லை என சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா,  நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பல்வேறு விதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த விதிகளுக்குள் இது வராது என்றும், எனவே, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை என்றும் ரூபா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்