பள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்

திருச்சியில் பள்ளியில் விளையாடியபோது காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தால், சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்
x
திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த ராம்குமார், சங்கீதா தம்பதியின் மகள் இலக்கியா, அங்குள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்த‌தில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் படி ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமிக்கு நிலைமை மோசமடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 3 மணி நேர தாமத‌த்திற்கு பின் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் அலட்சி போக்கினால் தான் சிறுமி உயிரிழந்த‌தாக குற்றம்சாட்டிய உறவினர்கள்,  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரிடமும் உறவினர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்