ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் தலவரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது.
ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்
x
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் தலவரலாற்றை விளக்கும் விதமாக, ஆண்டுதோறும் 3 தினங்கள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழாவின் முதல் நாளான இன்று, ராமநாதசாமி கோவிலில் இருந்து ராவணன் மற்றும் ராமர், லட்சுமணர், அனுமார் தங்க கேடயத்தில் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக திட்டக்குடியை அடைந்தனர். அங்கு ராமர் பத்து தலை ராவணனை சம்ஹாரம் செய்தார், அதன்பின் சம்ஹாரம் செய்த வேலுக்கு பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமர், லக்ஷ்மணர், அனுமர், ராமர் தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவிலை அடைந்ததும் தீபாராதனைகள் நடைபெற்றது. நாளை தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளதால், ராமநாதசுவாமி கோவில் நடை 3 மணிக்கு திறக்கப்பட்டு பின் 7 மணிக்கு அடைக்கப்படும். இதனைத் தொடர்ந்து பட்டாபிஷேகம் முடிந்து, மீண்டும் ராமர் மாலை 6 மணிக்கு கோவிலை அடைந்த பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். புதன்கிழமை ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்