மேட்டூர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழு ஆய்வு

பவானிசாகர் மற்றும் அமராவதி அணையில் நாளை, காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழு ஆய்வு நடத்த உள்ளது.
மேட்டூர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழு ஆய்வு
x
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதல்படி துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களின் நீர்வரத்து மற்றும் நவெளியேற்றத்தை கணக்கிட மத்திய நீர்வள ஆணையம் மூலம் உருவாக்கப்பட்டு உள்ள  இணையதள கண்காணிப்பு முறை குறித்து ஆய்வறிக்கை தர பணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கர்நாடகம், தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் துணைக் குழுவினர் ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதம் 4 மற்றும் 5-ந் தேதிகளில் துணைக் குழுவினர் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். இன்று  மத்திய நீர் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிலி குண்டு மற்றும் தொப்பையாற்றில் ஆய்வு செய்த குழுவினர், பிற்பகலில் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி, ஜீலை 31- ஆம் தேதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நாளை பவானிசாகர் மற்றும் அமராவதி அணையில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்