தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99 வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
x
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99 வது  பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா கால சூழலால் முன்னாள் தலைவர் விக்ரமன் பணியாற்ற முடியாத நிலையில் சங்கத்தின் தலைவராக தான் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார். நடிகர் சங்கத்துக்கு தலைவர் ஆகும் முழு தகுதியும் பாக்யராஜுக்கு இருப்பதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்