தனியார் பள்ளி அருகே பயங்கர தீ விபத்து - மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்...

சென்னை தாம்பரம் அருகே தனியார் பள்ளியின் முன் இருந்த குப்பை மேட்டில் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
x
மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் பக்கத்தில் உள்ள குப்பை மேட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ அருகே இருந்த மரங்களுக்கும் பரவியது.  இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீ தொடர்ந்து பரவியதால் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வளாகம் அருகே நடந்த தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்