தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு செய்தது.
x
கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. மருத்துவமனை அமைப்பதற்கு நிதியுதவி செய்யவுள்ள ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர். மருத்துவமனை அமையுள்ள இடத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் எனவும், மருத்துவமனையை முழுமையாக கட்டிமுடிக்க 4 ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்