அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி.
அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
x
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுண்டகிரி என்ற இடத்தில் அதிகாலையில், திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, திடீரென ஆக்சில் கட்டாகி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணகிரி நோக்கி அதிகவேகமாக சென்ற மற்றோரு அரசு பேருந்து, நின்று கொண்டிருந்த பேருந்தின் மோதாமல் இருக்க, இடதுபுறமாக சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்த லாரி, பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் ஏற்கனவே பழுதாகி நின்றிருந்த பேருந்தில் இருந்து இறங்கி, சாலையை கடந்த சென்ற பயணிகள் மீதும் இந்த லாரி மோதியுள்ளது. இதில் சாலையை கடக்க முயன்ற 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

Next Story

மேலும் செய்திகள்