திருப்பரங்குன்றத்தில் புதிய தங்கத்தேர் - 15 மாதங்களுக்குப் பின் தங்கத்தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில்,15 மாதங்களுக்குப் பிறகு, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் புதிய தங்கத்தேர் - 15 மாதங்களுக்குப் பின் தங்கத்தேரோட்டம்
x
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில்,15 மாதங்களுக்குப் பிறகு, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. அறுபடை வீடுகளில், முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த 2007ம் ஆண்டு 11 கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி மற்றும் 450 கிலோ தாமிரம் கொண்டு, 11 அடி உயரத்தில் தங்கத்தேர் செய்யப்பட்டது. இதில், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி -தெய்வானை உடன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தேர் மராத்துப் பணிக்காக, தேரோட்டம் நின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நன்கொடை தாரர்களால், தங்கத்தேர் மராமத்து பணி தொடங்கி, சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதையடுத்து,  கோயில் திருவாச்சி மண்டபத்தில் 15 மாதங்களுக்குப் பின்னர், பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் தங்கத்தேரை இழுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்