சென்னை அருகே டிப்பர் லாரி மோதியதில் காதலர்கள் பலி

சென்னை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காதலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை அருகே டிப்பர் லாரி மோதியதில் காதலர்கள் பலி
x
சென்னை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காதலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மணலி  மாத்தூர் பகுதியைச் சேர்ந்த  ஜான்ஜெபராஜ், டோல்கேட் நிறுத்தத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், இவரது வீட்டின் அருகே வசிக்கும் சுவர்ணமணியை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று, ஜான்ஜெபராஜ் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் மாதவரம் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்வதற்காக  சுவர்ணமணியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, வளைவில் திரும்பும் போது பின்னால் வந்த டிப்பர்  லாரி மோதியதில் ஜான் ஜெபராஜ், சுவர்ணமணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான  லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்