சென்னையில் 25 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்

சென்னையில் 25 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் 25 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்
x
சென்னையில் 25 லட்ச ரூபாய்  கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் . அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு பேர், உடனடியாக ஏடிஎம் அறையினுள் சென்றது போலீசாருக்கு சந்தேகம் எழுப்பியது. உடனே அவர்களை பின் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அவர்களிடம் இருந்த சுமார் 25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கனி, மணலியைச் சேர்ந்த அபுபக்கர் என தெரிய வந்துள்ளது. இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்