இருசக்கர வாகன விபத்தில் பள்ளிச் சிறுமி உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாண்டில்யன் - வடிவுக்கரசி தம்பதியின் மகள் அக்ஷ்யா.
இருசக்கர வாகன விபத்தில் பள்ளிச் சிறுமி உயிரிழப்பு
x
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாண்டில்யன் - வடிவுக்கரசி தம்பதியின் மகள் அக்ஷ்யா.
7 வயதான அந்தச் சிறுமி, தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை  கொடுங்கையூரில் இருந்து மூலக்கடை பகுதியில் உள்ள கடையில் மகளின் பிறந்த நாளுக்கு துணிமணிகள் வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் அக்ஷ்யாவுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  மூலக்கடை சந்திப்பு அருகே எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கீழே விழுந்ததில் அக்ஷ்யாவுக்கு  மண்டை உடைந்து, ரத்தம் பீறிட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அக்ஷ்யா வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. பிறந்தநாள் கொண்டாடும் வேளையில் தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்