பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி

நடிகர் சங்க தேர்தலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார்.
பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி
x
நடிகர் சங்க தேர்தலில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார். விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கும் பாக்யராஜ் அணி சார்பில், செயற்குழு உறுப்பினராக கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார். பாக்யராஜ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ், துணைத்தலைவர் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி மற்றும் பொது செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா, ஆர்த்தி கணேஷ் , காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, பரத், ஷாம், நிதின் சத்யா உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்